ஓசூரில் தனியார் மருத்துவமனைக்கு ஈமெயிலில் வெடிகுண்டு மிரட்டல், மருத்துவமனையில் போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 April 2024

ஓசூரில் தனியார் மருத்துவமனைக்கு ஈமெயிலில் வெடிகுண்டு மிரட்டல், மருத்துவமனையில் போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் . தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மர்ம நபர் இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர், கிருஷ்ணகிரி இருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் மருத்துவனை முழுவதுமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் ஒரே ஈமெயில் ஐடி மூலம் வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபர் ஒருவர் மருத்துவமனை  ஐடி களை ஹேக் செய்து ஒரே நேரத்தில் மிரட்டல் விடுத்துள்ளார்,  தமிழகத்திலும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாருதி நகரில் உள்ள (மித்ரலீலா) குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக மருத்துவர் நவீன் குமார் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.


அதன் அடிப்படையில் டிஎஸ்பி பாபு பிரசாத் தலைமையில் போலீசார் மருத்துவமனையில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அதேபோல் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளிடமும் தீவிரவிசாரணை நடத்திய பின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.


மருத்துவமனை முழுவதுமாக மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad