சூளகிரி அருகே துரை ஏரி வற்றியது; கோடைக்காலத்தில் தூர்வாரி நடவடிக்கை எடுத்திட விவசாயிகள் கோரிக்கை.. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 1 May 2024

சூளகிரி அருகே துரை ஏரி வற்றியது; கோடைக்காலத்தில் தூர்வாரி நடவடிக்கை எடுத்திட விவசாயிகள் கோரிக்கை..


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக அனைத்து நீர்நிலை பகுதிகளும் தண்ணீர் இன்றி வறட்சியாக காணப்படுகின்றது, இதோ போல் சூளகிரியை அடுத்த பேரிகை செல்லும் சாலையில் உள்ள துரை என்ற  ஏரி  அப்பகுதியில் இது ஒரு பெரிய ஏரியாக இருந்து வருகிறது.


மொத்தம் 54 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த துரை ஏரி கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை காலங்களில் பெய்த கனமழையால் ஏரி முழுவதுமாக நிரம்பி தற்போது வரை தண்ணீர் இருந்துள்ளது.. இதற்கு முன்பு பருவமழை நேரத்தில் காட்டாறு வெள்ளம், பல கால்வாய் , ஊற்றுகள் வழியாக இந்து துரை ஏரிக்கு நீர் வந்து நிரப்பியது.. இதற்கு பின் சூளகிரியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் முயற்ச்சியால் கடந்து 1 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து உபரி நீரை கால்வாய் வழியாக இந்து துரை ஏரிக்கு கொண்டுவரப்பட்டது..


இந்த துரை ஏரியின் நீரால் சூளகிரி, அனாசந்திரம், பின்டேகானப்பள்ளி, ஒட்டர்பாளையம், டேம்கொத்தப்பள்ளி, புளியரசி, மருதாண்டப்பள்ளி, ஆகிய கிராம மக்களுக்கு விவசாயம் செய்திடவும், குடிநீருக்கும் ஏதுவாக இருந்தது, இந்த பெரிய துரை ஏரியை கொண்டும் ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் பாய்ச்சியும் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதினா, கொத்தமல்லி, முட்டைகோஸ், கீரைகள் என அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.


துரை ஏரியில் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் ஏரி ஒட்டிய கிராம பகுதிகளில் புதியதாக விவசாயத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் போது சுமார் 300 அடியில் நீர் ஊற்றுகள் கிடைத்துள்ளதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தற்போது கோடை வெயிலில் போதுமான மழையில்லாத காரணத்தால் துரை ஏரி முழுவதுமாக வற்றி தண்ணீர் இன்றி சமவெளியாக காணப்படுகின்றது .இந்த துரை ஏரியில் தற்போது தண்ணீர் இல்லாத காரணத்தாலும் நிலத்தடி நீர் மட்டும் குறைந்த காரணத்தினாலும் அப்பகுதியில் உள்ள மக்கள் விவசாயத்தை கைவிடும் நிலைமைக்கு இந்த வறட்சி தள்ளப்பட்டுள்ளது.


இதன் சம்மந்தமாக ஏரி அருகே உள்ள விவசாயிகள் தெரிவித்தது, சூளகிரி வட்டாரத்தில் இது தான் பெரிய ஏரி  வருடத்திற்கு ஒரு முறை பெய்யும் பருவமழையால் ஏரி முழுவதுமாக தண்ணீர் நிரம்பி விடும் இந்த ஏரி நீர் இருப்பால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்திட விவசாயிகளுக்கு முக்கிய அங்கமாக இந்த தண்ணீர் விளங்கி வருகிறது.. தற்போது வெயில் காரணமாக கடும் வறட்சியால் ஏரி நீர் இன்றி காணப்படுவது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எனவே விவசாயிகளின் கோரிக்கையாக தற்போது ஏரியை முழுவதுமாக தூர்வாரி அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும், மேலும் ஏரி தூர்வாரும் பட்சத்தில் இது போன்ற வறட்சி காலத்தில் தண்ணீர் இருப்பால் விவசாயம் செய்திடவும், குடிநீருக்கும் தட்டுபாடு இருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.


"கடும் வெயில் காரணமாக வறட்சியால் சமவெளியான இந்த ஏரியை தூர்வாரி விவசாயிகள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.."

No comments:

Post a Comment

Post Top Ad