சூளகிரி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழை: 4 மாட்டுக்கொட்டைகள், 2 வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 3 May 2024

சூளகிரி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழை: 4 மாட்டுக்கொட்டைகள், 2 வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் நேற்று மாலை இரவு என சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. 2 நாளாக இன்று மதியம் முதல் பலத்த காற்று வீசு மழைப்பெய்தது.. கோடை வெயிலில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், சூளகிரி அடுத்த அத்திமுகம் அருகேயுள்ள உஸ்தனப்பள்ளி என்ற கிராமத்தில் சூறை காற்று காரணமாக 4 மாட்டுக்கொட்டைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தது.. மேலும் இரண்டு குடியிருப்பு வீடுகளின் மேற்கூரைகள்  விழுந்து சேதமடைந்துள்ளன..


சூறை காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகளில் யாருமில்லாத சமையம்  என்பதால்  யாருக்கும் எந்தவித காயம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்ப்படவில்லை, மேலும் இதன் சம்மந்தமாக சூளகிரி தாசில்தார் சக்திவேல் அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.. தகவலின் பேரில் தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறையினர் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


உஸ்தனப்பள்ளி கிராமத்தில் சூறைக்காற்று காரணமாக வீடுகள் மேற்கூரைகள் காற்றில் பறந்த சம்பவம் கிராமத்தில் சற்று பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad