- தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 26 May 2024

*சூளகிரி அருகே பழைமையான திரௌபதி கோவிலில் தெருகூத்து நாடகம் நடைப்பெற்று*


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் முன்பு கடந்த 18 நாட்களாக  கோட்டை தெரு சூளகிரி கொட்டாயூர்‌ சேர்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் நாடக கலைகுழுவை சேர்ந்த செல்வராஜ் மிருதகம் ஆசிரியர் தலைமையில் 22 நாடக கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு வேடமணிந்து கிராம மக்கள் மத்தியில் நாடகத்தை அரங்கேற்றனர்..

இந்த நிலையில் நாடகத்தின் கடைசிநாளால்  திரெளபதி அம்மன் கோவில் முன்பு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த தொரு கூத்து நாடகத்தில் துரியோதனன், பீமன் வேடமணிந்து நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து அரங்கேற்றினர்.


இந்த துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியில் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று துரியோதனன் - பீமன் படுகளம் தெருக்கூத்து நாடகத்தை கண்டு களித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad