சூளகிரி அருகே கிராமத்தில் பல்நோக்கு மைய கட்டிடம் அமைத்திட பிரச்சினை! அதிகாரிகளுடன்‌ கிராம மக்கள் வாக்குவாதம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 16 May 2024

சூளகிரி அருகே கிராமத்தில் பல்நோக்கு மைய கட்டிடம் அமைத்திட பிரச்சினை! அதிகாரிகளுடன்‌ கிராம மக்கள் வாக்குவாதம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பெரிய சப்படி என்ற கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 7 இலட்சம் மதிப்பீட்டில், பெரிய சப்படி கிராமத்தில்  உள்ள பெருமாள் கோயில் அருகே பல்நோக்கு கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.


இந்த பல்நோக்கு கட்டிடத்தில் ரேஷன் கடை செயல்பட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்த நிலையில்,மலை மீது உள்ள பெருமாள் கோயில் அருகே கட்டப்படும் ரேஷன்கடையால்  பெண்கள் முதியவர்கள், வயதானவர்கள் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும், வாகனங்கள் சென்று வர முடியாது என்பதால் மலை மீது உள்ள பெருமாள் கோயில் அருகே கட்டிடம் கட்டுவதை தவிர்ந்து கிராமத்தின் மைய பகுதியில் உள்ள காலி இடத்தில் பல்நோக்கு கட்டிடம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் 100 க்கும் மேற்ப்பட்டவர்கள் சூளகிரி தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக ஊரில் உள்ள கிராம நத்தம் நிலத்தில் அங்கன்வாடி மையம் அருகிலேயே பல்நோக்கு கட்டிடம் கட்டுமாறு தெரிவித்தும், தனிநபர் ஒருவர் மலை மீது கட்ட வேண்டுமென கூறுவதை எப்படி நீங்கள் கடைபிடிக்க முடியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


உரிய விசாரணை நடத்தி கிராம மக்களின் வசதிக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் அளித்த வாக்குறுதி ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad