சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலி. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 16 May 2024

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலி.

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சக்திவேல் (30) என்ற நபர் தனது இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்...


உடனடியாக அங்கிருந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் இறந்த நபரின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பின்னர் இந்த விபத்து சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மீது ஒருவர் உயிரிழந்த சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது..


No comments:

Post a Comment

Post Top Ad