சாம்பல் பள்ளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர்லாரி மோதி இரு வாலிபர்கள் உடல் நசுங்கி சாவு. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 11 June 2024

சாம்பல் பள்ளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர்லாரி மோதி இரு வாலிபர்கள் உடல் நசுங்கி சாவு.


கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த சாம்பல் பள்ளம் கிராமத்தின் அருகெந் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி இரு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தி வந்து கொண்டிருந்தனர். அப்போது சாம்பல் பள்ளம் கிராமத்தில் அருகே வந்தபோது பின்னே கண்டெய்னர் லாரி அவர்கள் மீது மோதியது.இதில் இரு வாலிபர்களும் கண்டெய்னர் லாரியின் அடியில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பின்னர் தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீசார் விபத்தில் பலியான இரு வாலிபர்களின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடன் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த இளைஞர்கள் யார்? மற்றும் எங்கிருந்து வந்தார்கள்? என்ற அடியாளம் தெரியாத நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டு வருகின்றனர். கண்டெய்னர் லாரி மோதி உடல் நசுங்கி இரு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விபத்தால் பகுதியில் 1 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


- ஓசூர் நிருபர் திருநாவுக்கரசு 

No comments:

Post a Comment

Post Top Ad