குழந்தை திருமணம் செய்ததால் சிறுமி விஷம் குடித்து தற்கொலை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 9 July 2024

குழந்தை திருமணம் செய்ததால் சிறுமி விஷம் குடித்து தற்கொலை


தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கெலமங்கலம் அருகே உள்ள தட்டச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (26), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி திருமணம் செய்து வைக்கப்பட்டது. படிப்பு பாதிக்கப்பட்டதால் மாணவி மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று மாலை மாணவி பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனை அறிந்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 


அங்கு நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இது தொடர்பாக ரத்தினகிரி கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில் மாணவி சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மாணவியின் கணவர் அஜித்தை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad