தமிழ்நாடு டெங்கு கொசு புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கம் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 22 July 2024

தமிழ்நாடு டெங்கு கொசு புழு ஒழிப்பு முன் களப்பணியாளர்கள் சங்கம் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு டெங்கு கொசு புழு ஒழிப்பு முன்களப்பணியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்டம் மற்றும் ஒன்றியத்திற்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டது இக்கூட்டம்  கிருஷ்ணகிரி மாவட்ட கொசு ஒழிப்பு பணியாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

மாநில கவுரவத் தலைவர்  Dr. G. R. இரவீந்திரநாத். M.B.B.S மற்றும் Dr. A.R.சாந்தி. M.B.B.S அவர்களின் ஆலோசனைப்படி மாநில தலைமை பொறுப்பாளர்கள் ஜெயவேல் (மாநில தலைவர் ), சதீஷ் (மாநில பொதுச் செயலாளர் ), பூமிநாதன் (மாநில பொருளாளர் இவர்கள் தலைமையில் பொறுப்பேற்றுக் இக்கூட்டம்  நடைபெற்றது.


இதில் முக்கிய தீர்மானமாக கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒரே துறையின் கீழ் ஊதியம் வழங்க வேண்டும், அரசு நிர்ணயித்த ஊதியத்தை மாதம்  5ஆம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும் கொசு ஒழிப்பு பணியாளர்களை மாற்று வேலைக்கு பயன்படுத்தக் கூடாது. பணி பாதுகாப்பு மற்றும் பணியின் போது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு உதவி தொகை அவர்கள் குடும்பத்திற்கு அரசு பணி வழங்க வேண்டும்.


கொசு ஒழிப்பு பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது, பணியாளர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும்அடையாள அட்டை,  வழங்க வேண்டும், மேற்கண்ட கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பேசுவதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளராக நளினி (மாவட்டத் தலைவி), பானுமதி, சரஸ்வதி (துணைத் தலைவி),  கலா (மாவட்ட செயலாளர்), பரிமளா, சுஜாதா (மாவட்ட துணை செயலாளர்கள்) புஷ்பா (மாவட்ட பொருளாளர்) உள்ளிட்டோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக 200க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad