ஊத்தங்கரையில் அம்பேத்கர் நினைவு நாள் & பாபர் மசூதி இடிப்பு நாளை ஒட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைதி ஊர்வலம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 6 December 2025

ஊத்தங்கரையில் அம்பேத்கர் நினைவு நாள் & பாபர் மசூதி இடிப்பு நாளை ஒட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைதி ஊர்வலம்.


ஊத்தங்கரை – டிசம்பர் 06 :

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு நாளையும், பாபர் மசூதி இடிப்பு நாளையும் முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. பொருளாளர் முனிராவும், மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் முன்னிலையில் இருந்தனர். மண்டல துணைச் செயலாளர் ஜிம் மோகன் (தமிழ் வளவன்) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஊர்வலத்தைத் துவக்கிவைத்தார்.

ஊர்வலம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக நான்கு முனை சந்திப்பில் நிறைவுற்றது. பின், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, கட்சியினரும் பொதுமக்களும் மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் தலைமை நிலைய பொறுப்பாளர் சிவராஜ், மாநில துணை செயலாளர்கள் ஜெயலட்சுமி, அசோகன், அம்பேத்கர் ஆகியோர் உட்பட மாவட்ட, தொகுதி, ஒன்றியம் மற்றும் நகர அளவிலான பல நிர்வாகிகள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சி முழுவதும் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெற்றது.


© தமிழககுரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

No comments:

Post a Comment

Post Top Ad