கிருஷ்ணகிரி, செப்டம்பர் 26 | புரட்டாசி 09:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிக்கபூவத்தி பொதுமக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு புறம்போக்கு நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோயில் மானியம் நிலங்கள் சுமார் 100 ஏக்கர் அளவில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலங்களை உடனடியாக மீட்டெடுக்கவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கோரினர்.
மேலும், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த 37 பேர்மீது பொய்யான வழக்கு சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளதாகக் கூறி, அவை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கோரினர். அதேபோல், தொட்டபூவத்தியில் உள்ள மண்டு மாரியம்மன் கோயில் உயிர்நீதிமன்ற ஆணைப்படி அனைத்து சமயத்தினரும் நாள்தோறும் திறக்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. மோகன்ராவ் தலைமையில் நடைபெற்றது. உப்புக்குட்டை, கெட்டுர், மிட்டப்பள்ளி, தன்டனூர், தொன்மரண்கொட்டாய், பண்ணக்கொள்ளை, தொட்டிப்பள்ளம், மத்தனேரி, ஊதன்கொட்டாய் ஆகிய ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியினரும் பொதுமக்களும் கலந்து கொண்டு சுமார் 4000 பேர் பங்கேற்றனர். பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கும் காவல் கண்காணிப்பாளருக்கும் மனு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment