கிருஷ்ணகிரி – செப்டம்பர் 17 (புரட்டாசி 01) -
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தன்ஷிகா என்ற 2 வயது பச்சிளம் குழந்தை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வலிப்பு காரணமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் மிகுந்த வறுமையால் நல்லடக்கம் செய்ய முடியாமல் தவித்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் முன்வந்து, அவர்களின் விருப்பப்படி கிருஸ்தவ முறையில் குழந்தையின் புனித உடலை நல்லடக்கம் செய்தது.
இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தன்னார்வலர் அணி அமைப்பாளர் திரு. சலீமுல்லாஹ அவர்கள், தன்னார்வலர் அணி நிர்வாகிகள் சையத் சாலமீன், அர்பித், அபி சுல்தான், முபாரக் ஆகியோர் கலந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்ட இந்த செயல், ஆதரவற்ற நிலையில் இருந்த குடும்பத்துக்கு பெரிய துணையாக அமைந்தது.
.jpg)

No comments:
Post a Comment