ஊத்தங்கரை – டிசம்பர் 22
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அண்ணா நகர் பகுதியில் உள்ள மாவுத்சரிப் (54) என்பவரது வீட்டிற்குள், சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டிற்குள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாவுத்சரிப், உடனடியாக ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், தீயணைப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு, வீட்டின் மேற்கூரை ஓட்டில் பதுங்கி இருந்த 6 அடி நீள சாரை பாம்பை, தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி பத்திரமாக பிடித்தனர். பின்னர், பிடிக்கப்பட்ட பாம்பை அருகிலுள்ள ஒன்னரை காப்பு காடு வனப்பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். இந்த துரித நடவடிக்கையால், வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் பெரும் அச்சத்திலிருந்து விடுபட்டனர். தீயணைப்புத் துறையினரின் மனிதநேய சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


No comments:
Post a Comment