ஊத்தங்கரை, டிசம்பர் 21:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி சாலை பகுதியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை இணைக்கும் வகையில் மக்கள் இணைப்பு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, லீடர் கார்த்தி தலைமையில், அம்ஜத் கான் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் முரளி விஜய், இணை செயலாளர் தாமோதரன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்கள் சிங்காரவேலன், சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், கழகத் தொண்டர்கள் பார்த்திபன், அருண்குமார், ரிஸ்வான், மனோஜ் குமார் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர். இந்த மக்கள் இணைப்பு பெருவிழாவின் போது, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு மாற்று கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இதில் மகளிர் அதிகளவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
மக்கள் நல அரசியல், இளைஞர் மற்றும் மகளிர் முன்னேற்றம், மாற்றத்தை நோக்கிய அரசியல் என்ற நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


No comments:
Post a Comment