ஊத்தங்கரை, டிச. 13:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையத்திற்கு அரசுப் பேருந்துகள் முறையாக வராததால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. திருவண்ணாமலையில் இருந்து வரும் பேருந்துகள் நான்கு முனை சந்திப்பில் இருந்து சேலம் நோக்கியும், பெங்களூரிலிருந்து வரும் பேருந்துகள் நான்கு முனையில் இருந்து திருவண்ணாமலை நோக்கியும், திருவண்ணாமலையில் இருந்து வரும் பேருந்துகள் நான்கு முனையிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படுவதால் பேருந்து நிலையம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இதனால் தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் கார்கள் பேருந்து நிலையத்துக்குள் பார்க்கிங் செய்யப்படுகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பேருந்து சேவையை சீரமைத்து, தனியார் வாகனங்களின் ஆக்கிரமிப்பை தடுத்து போக்குவரத்து துறை தகுந்த நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.



No comments:
Post a Comment