கிருஷ்ணகிரி, டிச. 13:
கிருஷ்ணகிரி வட்டத்திற்குட்பட்ட குந்தப்பள்ளி கிராமத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்களின் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புகைப்படம் மற்றும் கைரேகை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் கே.எம். சந்திரமோகன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் பொது விநியோக திட்டத்தின் முக்கியத்துவம், உரிமைகள், பயன்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். மேலும் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
முகாமில் தனி வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், சின்னசாமி ஆகியோரும், நியாய விலை கடை விற்பனையாளர் ராஜலட்சுமி உள்ளிட்டோரும் பணியாற்றினர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள், ஒரே இடத்தில் தேவையான திருத்தங்கள் மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் திருப்தி தெரிவித்தனர். இத்தகைய சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:
Post a Comment