ஊத்தங்கரை, டிச.14:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களின் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்த முதலமைச்சர், திருமண நிகழ்ச்சியை நிறைவு செய்த பின்னர், திருவண்ணாமலையில் நடைபெறும் இளைஞர் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார்.
அந்த வழியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வழியாக சென்ற போது, மாவட்ட எல்லையான அனுமன்தீர்த்தம் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து ஊத்தங்கரை வழியெங்கும் முதலமைச்சரை காண பொதுமக்கள் திரண்டு நின்றனர். அவர்களை பார்த்து வணங்கியபடி முதலமைச்சர் பயணம் தொடர்ந்தார்.
ஊத்தங்கரை ரவுண்டானா அருகே வந்த போது, மாநில மகளிர் அணி பொறுப்பாளர் மாலதி பூங்கொத்து வழங்கி வரவேற்றார். அதனை வாகனத்திலிருந்தபடியே பெற்றுக்கொண்ட முதலமைச்சர், அங்கிருந்து திருவண்ணாமலை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தார். முதலமைச்சரை நேரில் கண்ட மகிழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக திரண்டு இருந்து பின்னர் கலைந்து சென்றனர்.


No comments:
Post a Comment