ஊத்தங்கரை | டிசம்பர் 27
தேசிய உள்ளரங்கு வில்வித்தை சங்கம் மற்றும் இந்திய வெற்று வில் சங்கம் இணைந்து நடத்தும் 2-ஆம் ஆண்டு தேசிய அளவிலான உள்ளரங்கு வில்வித்தை போட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 27 மற்றும் 28 டிசம்பர் 2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா இன்று (27) சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு தேசிய உள்ளரங்கு வில்வித்தை சங்கத் தலைவரும், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனருமான Dr. சீனி திருமால் முருகன் தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
விழாவில் இந்திய வெற்று வில் சங்கத் தலைவர் C. ருக்மா சரவணன், துணை தலைவர் R.K. ரன்ஜன்துரை, தேசிய உள்ளரங்கு வில்வித்தை சங்கப் பொதுச் செயலாளர் R. கேசவன், தமிழ்நாடு வெற்று வில் சங்கத் தலைவர் S. சீனிவாசன், துணை தலைவர் S. செந்தில்குமரன், A. குமார், பொருளாளர் M.E. இரமேஷ், துணை செயலாளர் C. சுப்பரமணி, நந்தகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படுவதுடன், சிறப்பு பரிசாக முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,500, மூன்றாம் பரிசு ரூ.5,000, நான்காம் பரிசு ரூ.3,000 என மொத்தமாக ரூ.1,53,000 ரொக்கப் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்த தேசிய அளவிலான போட்டியை தமிழ்நாடு உள்ளரங்கு வில்வித்தை சங்கம் மற்றும் தமிழ்நாடு வெற்று வில் சங்கத்தினர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளதுடன், விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


No comments:
Post a Comment