ஊத்தங்கரை, ஜன.13:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள கூட்டுறவு உற்பத்தியாளர்–விற்பனை சங்க வளாகத்தில், தமிழக அரசின் சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கே. நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபிநாத், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.
விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி பேசினார். அவர் தனது உரையில்,
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5.70 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்,
-
தற்போதைய அரசு பொறுப்பேற்ற பின்னர் மாவட்டத்தில் 63 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
-
85 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் முதல்வர் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
-
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ரூ.118 கோடி மதிப்பீட்டில் 7,341 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் தணிகாசலம், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, பேரூராட்சி தலைவர் பா.அமானுல்லா, துணை பதிவாளர் சிவகுருநாதன், திமுக ஒன்றிய கழக செயலாளர்கள் மூன்றம்பட்டி குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், நரசிம்மன், மாவட்ட அவை தலைவர் நாகராஜன், நகர செயலாளர் தீபக், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி, ஒன்றிய துணைச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி, பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களிடையே மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியதாக அமைந்தது.


No comments:
Post a Comment