கிருஷ்ணகிரி - மார்ச். 16:
கிருஷ்ணகிரி மாவட்டம் பெல்லாரம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சின்னபெல்லாரம்பள்ளி கிராமத்தில் உள்ள நீர்நிலை மற்றும் காணாறு பகுதிகளில் குப்பைகள் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த பகுதியில் தொடர்ந்து குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் நீர்நிலையும் காணாறும் மாசடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பை மற்றும் கோழி இறைச்சி கழிவுகளை அகற்றி, சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.jpg)

No comments:
Post a Comment