விருதுகளை அள்ளும் 1ஆம் வகுப்பு மாணவி. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 21 February 2022

விருதுகளை அள்ளும் 1ஆம் வகுப்பு மாணவி.

சூளகிரியில் 1 ஆம் வகுப்பு மாணவி, இந்தியாவின் தலைநகரங்களையும், தமிழ்நாட்டின் மாவட்டங்களையும் இரண்டே நிமிடத்தில் கூறி சாதனை பக்கத்தில் இடம் பிடிக்க முயற்சித்து வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மில்லத் நகரை சேர்ந்த குமார் தனலட்சுமி தம்பதிகளின் 5 வயது   மகள் சுருத்திகா அங்குள்ள தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 


5 வயதான சுருத்திகாவிற்க்கு ஞாபக சக்தி அதிகமாக இருப்பதை உணர்ந்த பெற்றோர்கள் சுருத்திகாவிற்க்கு பொது அறிவு மற்றும் தற்காப்பு கலைகளில் ஈடுப்படுத்தி பயிற்சியளித்து வருகின்றனர்.


இந்தவகையில் 1 ஆம் வகுப்பு படித்து வரும் சுருத்திகா இந்தியாவின் தலைநகரங்களையும், தமிழ்நாட்டின் மாவட்டங்களையும் இரண்டே நிமிடத்தில் பேசி சாதனை பக்கங்களில் இடம் பிடிக்க முயற்ச்சித்து  வருகின்றனர். மேலும் சூளகிரியில் இயங்கி வரும் இந்தியன் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் சிலம்பம், குங்ஃபூ, யோகா போன்ற தற்காப்பு கலைகளில் சுருத்திக்கா மாணவி மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பல விருதுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

Post Top Ad