தனியார் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை பேருந்து விபத்து 11 பேர் காயம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 18 February 2022

தனியார் கார்மெண்ட்ஸ் தொழிற்சாலை பேருந்து விபத்து 11 பேர் காயம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் இயங்கி வரும் தனியார் FDS கார்மெண்ட்ஸ் என்ற தனியர் நிறுவன் பேருந்து ஓசூரில் இருந்து சூளகிரி நோக்கி 30 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் சென்னை பெங்களூரு தேசிய நெடுசாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது போது கோபுசந்திரம் அருகே வந்த போது முன்னே சென்று கொண்டிருந்த  லாரி  மீது பேருந்து மோதியது. இதில் பேருந்து டிரைவர் உட்பட  பேருந்தில் பயணம் செய்த கார்மெண்ட்ஸ் பெண் உழியர்கள் 15 பேருக்கு இரத்த காயம் ஏற்ப்பட்டது. 

இதையடுத்து தகவல் அறிந்து சென்ற சூளகிரி போலிசார் சம்பவயிடத்தில் இருந்து காயமடைந்தவர்களை மீட்டு தற்போது சூளகிரியில் உள்ள அரசு அவரச சிகிச்சை மையத்தில் சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர், இந்த விபத்து குறித்து சூளகிரி போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

தகடூர் குரல் நாவல்கள் படிக்க 

No comments:

Post a Comment

Post Top Ad