கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் செயல்பட்டு வருகிறது, தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோக்கள் எரிவாயு (கேஸ்) ஆட்டோ ஓட்டுனர்கள் பயண்படுத்தி வருகின்றனர். சூளகிரி இந்துஸ்தான் பெட்ரோலியம் நிலையத்தில் கேஸ் ஆட்டோக்களுக்கு நிரப்பப்படதா நிலையில் உள்ளதால் சூளகிரி ஆட்டோ ஓட்டுனர்கள் தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
சுமார் 6மாத காலமாக எரிவாயு வழங்கப்படாததால் பெட்ரோலிய நிலையத்தில் தர்ணாவில் ஈடுப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், பின்னர் நிலைய மேலாளர் விரைவில் தங்களது பிரச்சினை தீர்த்துவைக்கப்படும் என உறுதியளித்த பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment