சூளகிரி அருகே அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பட்டியலின மக்கள் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 13 February 2022

சூளகிரி அருகே அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பட்டியலின மக்கள்

சூளகிரி அருகே அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பட்டியலின மக்கள்


சூளகிரி அருகே 3  வருடங்களாக அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் பட்டியலின மக்கள்
மூன்று முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என குற்றசாட்டு 



கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த துப்புகானப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட டி.குருப்பரப்பள்ளி கிராமத்தில் 300 மேற்ப்பட்ட  குடுபங்கள் வசித்து வருகின்றனர்.

இதில் 120 குடும்பங்களாக பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர் கடந்த மூன்று வருடமாக  தங்கள் பகுதியில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது குடிநீர் குழாய்கள் உடைந்தும், 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாக  வெளியேறியவாறு  காணப்படுகிறது.மேலும் கழிவுநீர் கால்வாய் பகுதியில் நீர் தேக்க தொட்டி அமைந்து இருப்பதால் அடிக்கடி குடிநீர் துர்நாற்றம் வீசிவருவதாக அப்பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனர்


இதன் சம்மந்தமாக அப்பகுதி பட்டியலின மக்கள்  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மூன்று முறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தங்கள் பகுதியில் சீரான குடிநீர் அமைத்து தரவும் , கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்திடவும் , சாலை வசதிகள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு மீணடும் ஒரு முறை கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad