கிருஷ்ணகிரி அருகே அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 24 February 2022

கிருஷ்ணகிரி அருகே அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


 வேப்பனப்பள்ளியில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டம் அதிமுக கேபி முனுசாமி தொகுதியான வேப்பனப்பள்ளியில் அதிமுக மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வேப்பனப்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன் தலைமையில் முன்னிலையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடினர். இதையடுத்து அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், எஜிஆர் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad