கிருஷ்ணகிரி அருகே ஆபத்தான முறையில் பேருந்து பயணம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 24 February 2022

கிருஷ்ணகிரி அருகே ஆபத்தான முறையில் பேருந்து பயணம்




வேப்பனப்பள்ளியில் பேருந்து படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 2000த்திக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எகடதம்பள்ளி, முஸ்லிபூர், மாதேப்பள்ளி, பந்திகுறி, ஏரிகரை, அத்திகுண்டா, தடதாரை ஆகிய கிராமத்தில் இருந்து மாணவ மாணவிகள் காலை மற்றும் மாலை இருவேளையும் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படியில் தொங்கியவாறு ஒற்றை கையில் பிடித்து கொண்டு ஆபத்தை உணராமல் படிகளில் தொங்கியவாறு அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்களே பேருந்து முழுவதும் நிரம்பிவிடுதால் பொதுமக்கள் மற்றும் மற்ற பயணிகள் பயனிக்க முடியாமல் அடுத்த பேருந்துக்கு காத்திருந்து செல்லவேண்டியுள்ளது. இதனால் 6 4 மணிக்கு பள்ளி விடும் மாணவிகள் 6 மணி வரை காத்திருந்து செல்லும் அவல நிலையில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் அவதிப்பட்டு வருகிறனர். இது போன்ற ஆபத்தான முறையில் பள்ளி மாணவ மாணவிகள் பயணம் செய்வதை தவிர்க்க பள்ளிக்கு செல்லும் போதும், வீடு திரும்பும்போது உரிய நேரத்திற்க்கு போதிய பேருந்து வசதிகளை வழக்குமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad