கிருஷ்ணகிரி அருகே வாகனம் மோதி தாய் மகன் பலி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 24 February 2022

கிருஷ்ணகிரி அருகே வாகனம் மோதி தாய் மகன் பலிசூளகிரி அருகே ஈச்சர் வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த தாய் மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி  அடுத்த பேரிகை, பாரதிநகரை சேர்ந்த ரத்தினகுமாரி(45), கணேஷ்(21) ஆகிய இருவரும் சூளகிரிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து, மீண்டும் பேரிகைக்கு திரும்பி உள்ளனர்.

புளியரசி என்னுமிடத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது எதிரே வந்த ஈச்சர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது.

இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட தாய் மற்றும் மகன் இருவரும் எழும்புகள் உடைந்து இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்..
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலிசார் தாய் மற்றும் மகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்

தாய் மகன் உடலைப்பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது

No comments:

Post a Comment

Post Top Ad