கிருஷ்ணகிரி அருகே பூத்து குலுங்கும் மா பூக்கள் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 25 February 2022

கிருஷ்ணகிரி அருகே பூத்து குலுங்கும் மா பூக்கள்

 கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் பூத்துகுலுங்கும் மா பூக்கள். 

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தான் மா விளைச்சல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் மா விளைச்சல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்க்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் ஆண்டு தோறும் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் விவசாயிகள் மா விளைச்சல் சாகுபடி செய்து வருவது வழக்கம். இந்த பகுதியில் பெங்களூரா, சேந்துரா, நீலம், மல்கோவா, ஊறுகாய் மாங்காய், சர்கரை கட்டி பொன்ற பல்வேறு வகையான மா விளைச்சல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு போதிய நீர் ஆதாரம் இல்லமால் ஆறுகள் ஏரிகள் வரண்டு காணப்பட்டதாலும் கொரோனா பாதிப்பு காரணமாகவும் மா விளைச்சல் மற்றும் விலை இல்லமால் விவசாயிகளும் வியபாரிகளும் நஷ்டம் அடைந்தனர். 

நிலையில் தற்போது மழையால் ஆறுகள் ஏரிகளில் நீர் நிரம்பி உள்ளதால் மா விளைச்சல் அமோகம் உள்ளது. வேப்பனப்பள்ளியில் இருந்து பேரிகை, கேஜிஎப், குப்பம் செல்லும் சாலைகளில் இருபுறமும் மா பூக்கள் பூத்து குலுங்குகிறது. மாமரங்களை பூக்கள் போர்வை போர்த்தியதல் போல் உள்ளதால் வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் மாபூக்களை கண்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் நின்று படம் பிடித்து செல்கிறனர். 

மா பூக்கள் பூத்து குலுங்கள் இந்த மாமரங்களை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நல்ல மகசூல் உள்ளதால் மா சாகுபடியும் மா விளையும் அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad