கிருஷ்ணகிரி அருகே கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற விவசாயி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 26 February 2022

கிருஷ்ணகிரி அருகே கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற விவசாயி

கிருஷ்ணகிரி அருகே கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்த விவசாயி 

கிருஷ்ணகிரி மாவட்டம் 
போச்சம்பள்ளியை அடுத்த வீரமலை கிராமத்தைச் சேர்ந்த சாந்தன் மகன் மனோகரன் (வயது 44). விவசாயியான இவர், தனக்கு சொந்தமான மாந்தோப்புக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அங்கு புதரில் மறைந்திருந்த இருந்த விஷ பாம்பு இவரை கடித்துள்ளது. உடனே மனோகரன், அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் பையில் கட்டி எடுத்துக் கொண்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது பாம்புடன் வந்த விவசாயியை கண்டதும், ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மனோகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad