வேப்பனப்பள்ளியில் எருது விடும் விழாவில் 10 பேர் காயம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 11 March 2022

வேப்பனப்பள்ளியில் எருது விடும் விழாவில் 10 பேர் காயம்வேப்பனப்பள்ளியை அடுத்த குரியனப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா. 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு.10க்கும் மேற்பட்டோர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள குரியனப்பள்ளி கிராமத்தில் ஆண்டுதோறும் எருது விடும் விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு எருதுவிடும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் எருது விடும் விழாவில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சூளகிரி பேரிகை பாகலூர் ராயக்கோட்டை கெலமங்கலம் கிருஷ்ணகிரி ஓசூர் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து 250க்கும் மேறப்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. இதில் காலைகளில் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பட்டங்களை எடுக்க இளைஞர்களும் மாடுபிடிவிரர்களும் முட்டிக்கொண்டு களத்தில் நின்றனர். இதில் காளையர்களை முட்டிகொண்டு மின்னல் வேகத்தில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றது. காளைகளை பிடிக்க முயன்ற இளைஞர்களை காளைகள் முட்டி பந்தாடியது. இந்த விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் காளைகள் முட்டியத்தில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். இந்த விழாவில் வேப்பனப்பள்ளி போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad