மாணவரனப்பள்ளி, குருபரப்பள்ளி, பீமாண்டப்பள்ளி கிராமங்களில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு திருவிழா. வெகு சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மாணவரப்பள்ளி குருபரப்பள்ளி பீமாண்டப்பள்ளி பகுதிகளில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தை வளர்ப்பு திட்ட அலுவலர் சாரதா தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் ருக்மணி மணிமேகலை ஆரோக்கியமேரி ஆகியோர் மேற்பார்வையில் நிகழ்ச்சிகளுக்கு சிறப்பாக நடைபெற்றது.
இதில் கர்ப்பிணி பெண்களுக்கு மாலை அணிவித்து நலுங்கு வைத்து ஆரத்தி எடுத்து மலர் தூவி ஆசிர்வாதம் செய்தனர். மேலும் வளைகாப்பில் பங்கேற்ற கர்பணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கியும் மரியாதை செய்யப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏழு வகையான சாப்பாடுகள் செய்யப்பட்டு கர்பணி பெண்களுக்கு விருந்து வைத்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தை வளர்ப்பு திட்ட அலுவலர் சாரதா கர்பணி பெண்களுக்கு கர்பகாலத்தில் கடைபிடிக்குகும் பாதுகாப்பு வழிமுறைகளை கூறினர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்திரா நாகராஜ், நஞ்சேகவுடு ஆகியோர் கர்பணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் இதில் 300 க்கும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்களும், பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment