வேப்பனப்பள்ளியில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மழை ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில் காலை முதலே வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது.இந்த நிலையில் இன்று மாலை திடீரென மேகம் கருத்து சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கடையில் விளம்பர பலகைகள் அனைத்தும் காற்றில் தூக்கி வீசப்பட்டது. இதையடுத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வேப்பனப்பள்ளிசுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment