ஏரி பகுதி ஆக்கிரமிப்பு விவசாய நிலம் அகற்றப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட தொடதேப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள சின்னப்பபன் ரெட்டி ஏரி பகுதியில் அமைந்துள்ள 37 சென்ட் விவசாய நிலம் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது.
25 வருடமாக ஆக்கிரமிப்பு பகுதிகளில் விவசாயம் செய்த வந்த நிலையில் தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
நிலம் அகற்றப்படும் இடத்தில் ஓசூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி , சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் , நில அளவையர் வடிவேல் , கிராம நிர்வாக அலுவலர் நதியா , ஊராட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்
No comments:
Post a Comment