மான் வேட்டையில் ஈடுப்பட்ட நபர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 23 March 2022

மான் வேட்டையில் ஈடுப்பட்ட நபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரை அருகே மான் வேட்டை ஆடிய ஒருவர் கைது, ஒருவர் தப்பி ஓட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரை அடுத்த காமாட்சி கோட்டாய் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் முருகேசன் (55),சதாசிவம் மகன் காளி(45) ஆகிய இருவரும் சிங்காரப்பேட்டை காப்பு காட்டில் மான் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

 ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த சிங்காரப்பேட்டை வனத்துறையினர் மானை வேட்டையாடிய முருகேசனை கைது செய்தனர், அவருடன் வந்த காளி தப்பி ஓடியதால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 அவரிடமிருந்து மான் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad