உலக காசநோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கபட்டது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 24 March 2022

உலக காசநோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கபட்டது

உலக காசநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள செய்தி:

‘‘காசநோய் பற்றி, பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, உலக காசநோய் தினம், 2021 மார்ச் 24-ம் தேதி அனுசரிக்கப்படுவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். கடந்த 1882-ம் ஆண்டு இதேநாளில், காசநோய்க்கு காரணமான பாக்டீரியாவை கண்டுபிடித்ததை டாக்டர் ராபர்ட் கோச் அறிவித்தார். இது இந்த கொடிய நோயை பரிசோதிக்கவும், குணப்படுத்தவும் வழிவகுத்தது.

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்  சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் அரசு மருத்துவமனையில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்புமா, கையெழுத்து இயக்கமும், விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.


ஓசூர் மாநகர மேயர் சத்யா  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காசநோய் உறுதிமொழி ஏற்றும், கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்திட்டும், காசநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்தும் துவக்கி வைத்தார். 
இந்த நிகழ்ச்சியில் மாநகர துணை மேயர் C.ஆனந்தையா மாமன்ற உறுப்பினர் ரவி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பூபதி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad