உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 24 March 2022

உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா

கிருஷ்ணகிரி மாவட்டம்
 
கிருஷ்ணகிரியை அடுத்த வேப்பனஹள்ளி அருகே அரசு அரசு உயர்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைப்பெற்ற விழிப்புணர்வு விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சள் பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
.........................................................
கிருஷ்ணகிரி மாவட்டம் 

கிருஷ்ணகிரியை அடுத்த வேப்பனஹள்ளி அருகே உள்ள V.மாதேப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அரசினர்
உயர்நிலைப்பள்ளியில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு விழா நடைப்பெற்றது.
மண்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் . சத்தி ஆர். மனோகரன் தலமையில் நடைப்பெற்ற இந்த விழாற்கு சிறப்பு அழைப்பாளாக கிருஷ்ணகிரி பறக்கும் படை வட்டாசியர் பரிமேழலகன்
கலந்துக்கொண்டு நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து விளக்க உரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றிய மண்டல ஒருங்கிணைப்பாளர் 
டாக்டர் .சத்தி ஆர். மனோகரன் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் உலகமே மிகவும் மோசமான விளைவினை நோக்கி செல்கிறது, இதனால் பல்வேறு கால மாற்றங்களும் ஏற்பட்டு வருவதால் நிலத்தடி தண்ணீர் மட்டுமின்றி மண்வளமும் பாதிக்கப்பட்டு இருப்பதால் மனிதர்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும், மண்ணில் வாழும் பூச்சிகளும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது, இதுபோன்ற அவலங்களை தவிர்க்கும் 
மீண்டும் மஞ்சல்பை பயன்பாட்டிற்கு மாறவேண்டும், மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் இந்த பணியை கிராமங்கள் தோறும் ஏற்படுத்திட மாணவ சமுதாயம் முன்வரவேண்டும், அதற்கானப் பணிகளில் மாணவர்கள் முனைப்புடன் செயல்பட்டு இனிமேல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சல் பைகளை மட்டுமே பயன்டுபடுத்துவோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என வழியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கு மஞ்சல் பைகளும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் மாவட்ட அளவில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.
இந்த விழாவின் போது மாவட்டத் தலைவர் கேசவன் பள்ளி தலைமை ஆசிரியர் இராஜா, மற்றும் ஆசிரியர்கள் பாகிருஷ்ணன், 
திருமதி பாரதி உள்ளிட்ட பலர் கலந்துக்
கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad