மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதிகளில் உள்ள 18 வயதுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் தேசிய அடையாள அட்டை மற்றும் இலவச அறுவை சிகிச்சை உதவி உபகரணங்கள் கல்வி மற்றும் பராமரிப்பு உதவிதொகை ஆகியவற்றை மாற்றுதிறனாளி மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வரும் மாதம் 7 ஆம் தேதி நடைப்பெற உள்ள மாற்றுத்திறனாளிகான மருத்துவ சிகிச்சை முகாமில் அனைவரும் கலந்துகொள்ளும் விதமாக சூளகிரி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்படுத்தும் விதமாக அனைவருக்கும் கல்வி மற்றும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்திட வேண்டும் என கோஷம் எழுப்பியவாறு பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
No comments:
Post a Comment