கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 4 March 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது

சூளகிரியில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கட்டிகானப்பள்ளி கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கால்நடை சிறப்பு முகாமில் , கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது , மேலும் சினை பரிசோதனை , மலடு நீக்கம், செயற்கை முறையில் கருவூட்டல் பணி, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம்,சுண்டுவாத அறுவை சிகிச்சை, மற்றும் அனைத்து கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் கால்நடை வளர்ப்பு சம்பந்தப்பட்ட விளக்கங்கள் அளிக்கப்பட்டது , திவனப்பயிர் வளர்ப்பு பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது , முகாமில் கலந்துக்கொண்ட சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மேலும் சிறந்த கால்நடை வளர்போருக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.

இந்த முகாம் நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் மற்றும் இளவரசன் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜேஷ் கலந்துக்கொண்டார் இந்த நிகழ்ச்சியில் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கால்நடைகளுடன் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad