கிருஷ்ணகிரியில் EPS, OPS பதவி விலக வேண்டும் போஸ்டரால் பரபரப்பு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 4 March 2022

கிருஷ்ணகிரியில் EPS, OPS பதவி விலக வேண்டும் போஸ்டரால் பரபரப்பு

கிருஷ்ணகிரியில் EPS & OPS பதவி விலகவேண்டும் , போஸ்டரால் பரபரப்பு 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் பதவி விலக வேண்டு மென வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதவிவிலக வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கிருஷ்ணகிரி நகரில் புதிய பேருந்து நிலையம், பெங்களூரு சாலை, சேலம் சாலை, காவேரிப்பட்டணம் பனகல் தெரு, தருமபுரி சாலை, கொசமேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிமுக-வின் தலைமை நிர்வாகிகள் பதவி விலக வேண்டும். சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்று ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியை வழிநடத்தி மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த போஸ்டர்களை காவேரிப்பட்டணம் ஒன்றியத்தைச் சேர்ந்த பி.சி.வெற்றிவேல் என்பவர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டிருக்கும் காவேரிப்பட்டணம் பகுதி, அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad