தேன்கனிக்கோட்டையில் மாடு திருடிய நபர் கைது
கிருஷ்ணகிரிமாவட்டம்
தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நமிலேரி கிராமத்தில் நாகேஷ் என்பவர் 03.03.2022 ஆம் தேதி இரவு அவரது வீட்டின் பின்புறம் இரண்டு மாடுகளையும் ஒரு கன்று குட்டியையும் கட்டிவைத்து விட்டு சென்றதாகவும், மறுநாள் காலை வந்து பார்க்கும் பொழுது ஒரு மாடும், ஒரு கன்றுக்குட்டியும் திருடு போய் இருந்ததாக நாகேஷ் காவல் நிலையத்தில் வந்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் மாடு திருடிய எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment