கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வருகிற 18-ந் தேதி தேர் திருவிழா நடைபெறு வதையொட்டி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ் ணகிரி மாவட்ட கலெக் டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர்திருவிழா வருகிற 18-ம் தேதி (வெள் ளிக்கிழமை) நடை பெறுகிறது.
இதற்காக அன்றைய தினம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுரிகளுக்கு உள் ளூர் விடுமுறை அளிக் கப் படுகிறது.
இதனை ஈடுகட்டும் வகையில் வரும் 26-ந் தேதி (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளுர் விடுமுறை நாள் செலவாணி முறிச் சட்டம் 1881-ன் கீழ் அறிவிக் கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடு முறை நாளன்று ஓசூர் கோட்டத்திற்கு உட் பட்ட கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக் கும் பொருட்டு குறிப் பிட்ட பணியாளர் களோடு செயல்படும் என தெரிவிக்கப் ட்டுள்ளது.
No comments:
Post a Comment