கனமழையால் வெற்றிலை தோட்டம் சரிந்தது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 22 March 2022

கனமழையால் வெற்றிலை தோட்டம் சரிந்தது



வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை பெய்த கனமழை காரணமாக வெற்றிலை தோட்டம் சரிந்தது. தக்காளி பீர்கங்காய் தோட்டமும் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டியல்நாத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நஞ்சுண்டன் 45. இவர் தனது விவசாய நிலத்தில் ஒரு ஏக்கரில் வெற்றிலை தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று பெய்த கனமழை காரணமாக இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இந்தநிலையில் அதிகாலையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக இவரது விவசாய நிலத்தில் ஒரு ஏக்கரில் அமைக்கப்பட்டிருந்த வெற்றிலை தோட்டம் முழுவதும் சரிந்து விழுந்தது.

 இதில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெற்றிலை தோட்டங்கள் முழுவதுமாக நாசமானது. மேலும் இப்பகுதியில் கனமழை காரணமாக தக்காளி பீர்க்கங்காய் மற்றும் புடலங்காய போன்ற விவசாய பயிர்களும் மழையில் சரிந்து நாசம் அடைந்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பாதிக்கபட்ட விவசாய நிலத்திற்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad