கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி இரு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 5 March 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி இரு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

போச்சம்பள்ளி அருகே தனது இரு குழந்தைகளை தூக்கிட்டு கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொப்பி கடையில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு காயத்ரி என்கிற மனைவியும் கனிஷ்கா மற்றும் சர்வன் என இரு குழந்தைகளும் உள்ளனர் வெங்கடேசன் பணி நிமித்தமாக திருப்பதி சென்று விட்ட நிலையில் நடுப்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் மாமியார் உதய லட்சுமியுடன் காயத்ரி மற்றும் அவரது இரு குழந்தைகளும் வசித்து வந்த நிலையில் இன்று மாலை 3 மணியளவில் மாடியில் உள்ள தனது அறையில் தனது இரு குழந்தைகளையும் தூக்கி விட்டு பின்னர் காயத்ரியும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தற்கொலைக்கான காரணத்தையும் விசாரித்து வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad