கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரத்த தான முகாம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 5 March 2022

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

சூளகிரி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் குஷி கிளினிக் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரத்த தான முகாம் நடைபெற்றது நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்தனர்.


சூளகிரி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் குஷி கிளினிக் , உயிரூட்டல் அறக்கட்டளை மற்றும் சூளகிரி அரசு ஆரம்ப சுகாதாரம் , இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.


இரத்தம் வழங்கிய நபர்களுக்கு ஊட்ட சத்து மிக்க பழங்கள் , பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது‌ மேலும் இரத்தம் வழங்கிய நபர்களுக்கு ஓசூர் அரசு இரத்த வங்கி சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 இந்திய நிகழ்ச்சியில் சூளகிரி வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா , மாவட்ட நலக்கல்வியாளர் சப்தமோகன் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சூளகிரி கிளை மேலாளர் இராமகிருஷ்ணன் மற்றும் குஷி கிளினிக் நிறுவனத்தினர் மற்றும் மற்றும் உயிரூட்டல் அறக்கட்டளை நிர்வாகிகளும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad