விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 22 March 2022

விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை



வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் தொடரும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியானது தமிழகத்தின் ஆந்திரா மற்றும் கர்நாடகா மூன்று மாநிலத்தின் எல்லைப் பகுதியாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் இருந்து பேரிகை, பாகலூர், கேஜிஎப், குடிபள்ளி மற்றும் குப்பம் ஆகிய முக்கிய நகரங்களுக்கு கனரக வாகனங்களும் நான்குசக்கர வாகங்களும், இருசக்கர வாகங்களும் அதிகளவில் சென்று வருகின்றனர். இதனால் சாலைகள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையை இந்த சாலைகளில் வேகத்தடை ஏதும் அமைக்கப்படாததால் இப்பகுதியில் வாகனம் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலிகளும் படுகாயம் அடைந்து வருவது அதிகரித்து வருகிறது. 

மேலும் வேப்பனப்பள்ளி நகரத்தின் நடுவே இந்த வேகத்தை அமைக்கப்படாததால் இப்பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அதிவேகமாக சென்று சென்று வருவதால் இப்பகுதி அடிக்கடி பொதுமக்கள் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்து வருகின்றனர். இது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் இப்பகுதி பொதுமக்கள் நடந்து செல்லவே அச்சப்பட்டு வருகின்றனர். இந்த விபத்துகளை தடுக்க விபத்து பகுதிகளான மாதேப்பள்ளி கூட்டுரோடு சாலையிலும், நாடுவனப்பள்ளி கூட்டு ரோடு சாலையில், காந்தி சிலை அருகிலும் குப்பம் ஜங்ஷன் சாலையிலும் நாச்சிகுப்பம் கூட்டு ரோடு பகுதியில் வேகதடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வேகத்தில் அமைப்பதன் மூலம் பல உயிர்பலிகளையும் படுகாயமடைந்து வருவதையும் தவிர்க்க முடியும் எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad