கிருஷ்ணகிரி நகாட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான முதல் ஆய்வுக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 14 March 2022

கிருஷ்ணகிரி நகாட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான முதல் ஆய்வுக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி நகாட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான முதல் ஆய்வுக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.

நகர்மன்ற தலைவர் திருமதி பரிதா நவாப் தலைமையில் நடைப்பெற்ற இந்தக் கூட்டத்தின் போது நகர் மன்ற ஆணையாளர் முருகேசன், நகர துப்புரவு ஆய்வாய்வாளர்
மோகனசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்தக் கூட்டத்தின்போது கடந்த சில ஆண்டுகளாக நகராட்சி குப்பைக் கூடாரமாக காணப்பட்டதால் பெரும் தூர்நாற்றம் வீசியதால் மக்கள் மிகவும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர், இனிமேல் இது போன்ற அவலங்களை களைந்து குப்பை இல்லா நகராமாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இனைத் தொடர்ந்து உரை ஆற்றிய நகர்மன்ற தலைவர் திருமதி பரிதா நவாப் கிருஷ்ணகிரி நகரட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பை இல்லா வார்டுகளாக மாற்றம் செய்யும் பணி தூய்மைப் பணியாளர்களிடம் உள்ளது, கடந்த பல ஆண்டுகளாக இருந்தது போல இனி இருக்கக்கூடாது கிருஷ்ணகிரி நகராட்சி மற்ற நகராட்சிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், மேலும் தூய்மைப் பணியாளர்களின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது, ஆகையால் இனிவரும் காலங்களில் தூய்மைப் பணியாளர்கள் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும், இதில் மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கும் பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தின்போது நகராட்சி அலுவலர்கள் மட்டுமின்றி தூய்மை பணியாளர்களும் கலத்துக்
கொண்டுடனர்.

No comments:

Post a Comment

Post Top Ad