சூளகிரியில் அரசு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 8 March 2022

சூளகிரியில் அரசு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி

சூளகிரியில் அரசு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி மேலாண்மைக்குழு ,உறுப்பினர்கள் ,உள்ளாட்சி ,பிரதிநிதிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ,கல்வியாளர்கள் ,தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் கல்வி உரிமைச் சட்டம் 2005 கூறியுள்ளபடி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு முக்கியத்துவம் அதன் செயல்பாடுகளும் குழந்தை உரிமைகள் மற்றும் மேம்பாட்டு திட்டம் தயாரித்து செயல்படுவதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு தொடக்கப்பள்ளியில் நடைப்பெற்ற பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைப்பெற்றது.


இல்லம் தேடி கல்வி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமண தடுப்பு, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.

முகாம் நிகழ்ச்சியில் இப்பயிற்சியில் குறு வளமைய தலைமையாசிரியர் பிரபாகரன் வட்டார கல்வி அலுவலர் வெங்கட் குமார் மற்றும் மாரண்டபள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை சிவராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலா வெங்கடேசன் பூர்ணிமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad