கோதண்டராம சுவாமி தேர் திருவிழா ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 18 March 2022

கோதண்டராம சுவாமி தேர் திருவிழா ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்



வேப்பனப்பள்ளி ஸ்ரீ கோதண்டராம சுவாமி மாகதேர் திருவிழா. 5000 பக்தர்களுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமூட்லு கிராமத்தில் உள்ள 500 வருடம் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனிமாத மகா தேர் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த சனிக்கிழமை முதல் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் காட்சி அளித்தார். இந்த நிலையில் இன்று மகா தேரோட்டத்தில் இன்று ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலை முதலே சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் அலங்காரம் செய்யப்பட்டு இன்று மதியம் பெரிய தேரில் சுவாமி அமர்த்தப்பட்டது. இதையடுத்து கோவில் திருவிழாவில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிந்தோ என்ற முழகத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். இத்திருவிழாவில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த தேர் திருவிழாவில் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் அன்புமணி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த தேர் திருவிழாவில் ஆஞ்சிஞயர் திருவிழாவும் ஞயாற்று கிழமை பல்லக்கு உற்வசவமும் நடக்க உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad