மாடு முட்டி ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 25 March 2022

மாடு முட்டி ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி



சூளகிரி அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டி 9 ஆம் வகுப்பு மாணவன் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பெரிய சப்படி கிராமத்தில் இன்று எருதுவிடும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் சூளகிரி ராயக்கோட்டை கெலமங்கலம் தளி பேரிகை பாகலூர் பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

 இந்த நிலையில் கண்லட்டி கிராமத்தைச் சேர்ந்த ரேணுகா என்பவரின் மகன் திவாகர் 13 எருது விடும் கான வந்திருந்தார். அப்போது கூட்டத்தில் சீறிப்பாய்ந்து கொண்ட ஒரு காளை எதிர்பாராவிதமாக மோதி தூக்கி விசியது. இந்தில் திவாகர் அருகே இருந்த வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக திவாகரை மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அழைக்கப்பட்டது .

இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஆம்பிலன்சில் பரிதாபமாக உயிரிழந்தார். ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளிக்கு செல்லாமல் எருது விழாவில் கலந்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad