மாற்றுதிறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 25 March 2022

மாற்றுதிறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில்5.4.2022 அன்று நடைபெற இருக்கும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாமை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 25 .3 .2022 இன்று மாவட்ட கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 

வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு ஆகியோர் பேரணியில் முன்னிலை வகித்தனர். இப்பேரணியில் பொதுமக்களிடம் 0 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் SMC கலைக்குழு வாயிலாக மருத்துவ முகாமின் மூலம் அரசாங்கம் வழங்கக்கூடிய சலுகைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பேரணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பு பயிற்றுனர்கள் இயன்முறை மருத்துவர், SRP பணியாளர்கள், கணக்காளர்கள் மற்றும் பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad